Events

ayya vaikundar avathara dinam

அய்யா துணை

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா

அய்யாவைகுண்டரின் 181வது அவதார பெருவிழா மாசி 20ம்தேதி திங்கள் கிழமை.

அவதாரதின ஊர்வலம் மாசி 19ம்தேதி  ஞாயிற்றுக்கிழமை அய்யாவின் அவதாரபூமி திருச்செந்தூரில்  இருந்து வாகனபேரணியாக அதிகாலை 5மணியளவில் புறப்பட்டு உடன்குடி, சீர்காச்சி, நடுவக்குறிச்சி வழியாக சரியாக 12.00 மணியளவில் வாகனபேரணி திசையன்விளை வந்து சேரும். அதன்பின் திசையன்விளையில் இருந்து நடைபயணமாக அன்புக்கொடி மக்கள் காவிக்கொடி பிடித்த வண்ணம் எருமைகுளம் திருத்தாங்கல் சென்று அங்கே தர்மங்கள் நிறைவேறிய பின்பு வாகன பேரணியாக அன்புக்கொடி மக்கள் வல்லவன்விளை திருத்தாங்கல் சென்றடைவார்கள். அங்கே அய்யாவுக்கு பணிவிடையும் தர்மங்களும் நிறைவேறிய பின்பு அஞ்சிகிராமம் வழியாக வாகனப் பேரணி ஊர்வலம் இரவு 11.00 மணியளவில் நாகர்கோவில் வந்துசேரும்.

மாசி 20ம்தேதி திங்கள் கிழமை அதிகாலை 5.00 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்பு தலைமைபதிக்கு அன்புக்கொடிமக்கள் காவிக்கொடி பிடித்து நடைபயணமாக மாபெரும் ஊர்வலம் நடைபெறும்.

தானதர்மம் செய்திருங்கோ தழைப்பீர்கள் நீங்க மக்கா.

IMG_0132 IMG_0134 IMG_0135 IMG_0138 IMG_0142 IMG_0143 IMG_0146 IMG_0150 IMG_0152 IMG_0157 IMG_0161 IMG_0162 IMG_0163 IMG_0164 IMG_0170 IMG_0192 IMG_0199 IMG_0200 IMG_0201 IMG_0202 IMG_0203 IMG_0204 IMG_0208 IMG_0213 IMG_0215 IMG_0216 IMG_0218 IMG_0219

ayya vaikundar avathara dinam

அய்யா உண்டு